விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி அருகே நேற்றிரவு(நவ.1) புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், மரக்காணத்தில் இருந்து கீழ்பேட்டை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கீழ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் பச்சையப்பன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்த மரக்காணம் காவல் துறையினர் இறந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.