சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சேர்ந்த மாதேஷ் உடல்நலக்குறைவு காரணமாக அவரது சகோதரர் ஓபுளி, தந்தை பட்டாபி ஆகியோருடன் அரசு மருத்துவமனையில் சிகி்ச்சைப் பெற்று வந்தார். அப்போது மருத்துவமனை அருகில் உள்ள முனியப்பன் கோயிலில் தங்குவதை ஓபுளியும், பட்டாபியும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இரவு நேரங்களில் மருத்துவமனையில் உள்ள அம்மா அரங்கம் அருகிலும் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில், அங்கே வசித்து வந்த செல்வம் என்பவருக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
சயனைடு கலந்த பிராந்தி கொடுத்து இரட்டைக்கொலை! - குண்டர் சட்டத்தில் கைது
சேலம் : சகோதரர்கள் இருவருக்கு பிராந்தியில் சயனைடு கலந்து கொடுத்து கொன்ற செல்வம் என்பவரைக் காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
இதனை மனதில் கொண்டு கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி அன்று அன்று காலை ஏழு மணியளவில் கோட்டை மைதானம் முனியப்பன் கோயிலில் தங்கியிருந்த மாதேஷ், ஓபுளி ஆகிய இருவருக்கும் செல்வம் பிராந்தியில் சயனைடு கலந்து கொடுத்துள்ளார். இதனை அறியாமல் பிராந்தி அருந்திய சிறிது நேரத்தில் இருவரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுவந்த செவ்வாய்பேட்டை காவல் துறையினரிடம், செல்வம் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர், மேலும் அவர் கைவசம் இருந்த சயனைடும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இரக்கமின்றி செய்யப்பட்ட இரட்டைக்கொலையையும், பொது மக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதையும் கருத்தில்கொண்டு செல்வம் (எ) செல்வகுமாரை காவல் துணை ஆணையாளர் எம். சந்திரசேகரன் பரிந்துரையின் பேரில், காவல் ஆணையாளர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று (நவ.02) ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார்.