தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

செல்ஃபோன் பறித்துச் சென்றவரை துரத்திப் பிடித்து, குத்திக் கொன்ற இளைஞர்கள்! - திருப்பூர் இளைஞர் கொலை

திருப்பூர்: நள்ளிரவு வேலை முடிந்து வந்த வடமாநில தொழிலாளியிடம் கைபேசியைப் பறித்து கொண்டு தப்பியோடியவர் குத்தி கொலை செய்யப்பட்டார்.

youth murder in thiruppur
youth murder in thiruppur

By

Published : Nov 30, 2020, 1:24 PM IST

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (33). வீடில்லாத இவர், திருப்பூரில் ரோட்டோரங்களில் வசித்து வந்தார். இச்சூழலில் நேற்று நள்ளிரவு (நவ. 29) திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் ரோட்டோரம் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது வடமாநில தொழிலாளர்களான தினேஷ் குமார், சத்திரி ஆகியோர் அவ்வழியே நடந்து வந்து கொண்டிருந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டிய சீனிவாசன், வடமாநில இளைஞரான தினேஷ்குமாரிடம் இருந்து, 2000 ரூபாய் பணம், கைப்பேசி ஆகியவற்றை மிரட்டி பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.

அவற்றைப் பறித்துக் கொண்டு ஓடியபோது, வடமாநில இளைஞர்கள் இருவரும் சீனிவாசனை துரத்திச் சென்று வழிமறித்து தங்கள் பொருளை கேட்டுள்ளனர். ஆனால் தர மறுத்த சீனிவாசன் வடமாநில இளைஞர்களை மீண்டும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற வடமாநில இளைஞர்கள் சீனிவாசனிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவரைக் குத்திக் கொன்றனர். இதுகுறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details