மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கோவில்பத்து கிராமத்தில், சூரிய பிரகாஷ் (20) என்ற இளைஞர், கஞ்சா விற்பனை செய்வதாக சீர்காழி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், அங்கு சென்று சோதனை செய்த போது கஞ்சா விற்பனை நடந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சூரிய பிரகாஷை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து சுமார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பத்து கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது! - கஞ்சா பறிமுதல்
நாகப்பட்டினம்: கஞ்சா விற்பனை செய்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர் பத்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
arrest
இவர் தேனியிலிருந்து கஞ்சாவை மயிலாடுதுறை, கும்பகோணத்திற்கு ரயிலில் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு, சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, காவல்துறையினர் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் திருட்டு - 24 மணிநேரத்தில் கொள்ளையனைப் பிடித்த காவல் துறை!