விழுப்புரம் அடுத்த மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த தென் நிலவன் என்பவர், ரேவதியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ஒரு சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்று உள்ளார்.
செயின் பறிப்பு வழக்கில் இளைஞருக்கு ஏழு ஆண்டு சிறை! - விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம்
விழுப்புரம்: பெண்ணிடம் கத்தியைக் காட்டி நகை பறித்த வழக்கில், இளைஞருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
chain snatch
இதையடுத்து, ரேவதி அளித்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் தென் நிலவனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு தென் நிலவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.