தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கடைக்குள் பதுங்கி கொள்ளை முயற்சி - ஊழியரைப் பிடித்த உரிமையாளர் - வேப்பேரி காவல் நிலையம்

சென்னை: கடைக்குள் பதுங்கி பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற ஊழியரை உரிமையாளர் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

arrest
arrest

By

Published : Mar 19, 2020, 1:57 PM IST

சூளையிலுள்ள ஆரிமுத்து முதலி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (47). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சுரேஷ் (18) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை உரிமையாளர் சுரேஷ் மூடியுள்ளார். அப்போது கடைக்கு இரண்டு கதவுகள் (ஷட்டர்) உள்ளதால் ஒன்றை மூடிவிட்டு மற்றொரு கதவை மூடும்போது, அங்கு பணிபுரியும் சுரேஷ் கடைக்குள் பதுங்கியுள்ளார். இதனை அறியாமல் சுரேஷ் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில், இரவு ஒரு மணியளவில் குளிர்பானம் எடுப்பதற்காக கடையை திறக்கும்போது, சுரேஷ் கள்ளாப்பெட்டியை உடைத்து பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். உடனே வேப்பேரி காவல் நிலையத்திற்கு உரிமையாளர் சுரேஷ் தகவல் தெரிவித்ததன் பேரில், பணியாளர் சுரேஷை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:குடும்பப் பிரச்னையில் சித்தப்பாவை கொன்ற மகன் கைது

ABOUT THE AUTHOR

...view details