மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்தால் அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கு ரகசிய தகவலளிக்க வேண்டும் என்று பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் குமரன்கோவில் மேலத்தெருவில் இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று கஞ்சா வாங்குவதுபோல் நடித்து கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன்(25) என்ற இளைஞரை பிடித்தனர்.