திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் மடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ், இவரது மனைவி திரிஷா(20). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடமாகிறது. சமீபத்தில் ஆனந்தராஜ் வேலை தேடி சென்னை சென்றுள்ளார்.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் குடும்பத் தகராறு காரணமாக திரிஷா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கணவர் வெளியூர் சென்ற நிலையில், திரிஷாவுடன் அவரது கணவர் வீட்டினர் யாரும் சரிவர பேசாத காரணத்தால், திரிஷா விஷமருந்தியதாக கூறப்படுகிறது.
திரிஷா அடிக்கடி வாந்தி எடுத்து மயங்கிய காரணத்தால், உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு திரிஷாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், விஷம் உடல் முழுவதும் பரவி விட்டது, இனி அவரை காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ளனர்.