கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபனா(27). இவருக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் 2018இல் திருமணம் நடைபெற்றது. எருமனூரில் வசித்து வரும் இவர்களுக்கு விஷோத் என்ற ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவர், மாமனார், மாமியார் ஆகிய மூவரும் தொடர்ந்து ஷோபனாவை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷோபனா இன்று எருமனூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஷோபனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் முன் புடவையை கழுத்தில் மாட்டிக் கொண்டு கண்ணீர் மல்க தனக்கு நடந்த கொடுமைகளை விவரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.