தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஏரியில் மிதந்த பெண்ணின் உடல்! - ஏரியில் மிதந்த சடலத்தை மீட்ட காவல் துறை

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள சுன்னம் செரு ஏரியில் மிதந்துவந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஏரியில் மிதந்துகிடந்த பெண்ணின் சடலம்: காவல் துறை விசாரணை
Women dead body found in telangana lake

By

Published : Jun 22, 2020, 2:03 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சுன்னம் செரு ஏரியில், பெண்ணின் உடல் ஒன்று மிதந்துவந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இந்தத் தகவலின்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். பின்னர் அவர்கள் ஏரியில் மிதந்த பெண்ணின் உடலை அங்கிருந்து வெளியே எடுத்தனர். அப்போது, அந்தப் பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் காவலர்கள் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து பெண்ணின் உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பெண்ணின் உடலில் காயங்கள் தென்பட்டுள்ளன. இதனால் பெண் பாலியல் வன்புணர்வுக்குள்ளாகி கொல்லப்பட்டரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? எனப் பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனாவுடன் திரும்பிவந்த மகனை அழைத்துவரச் சென்ற நபர்!

ABOUT THE AUTHOR

...view details