தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

துப்பாக்கித் தோட்டாக்கள் மாயம்; நகைக்கடை பாதுகாவலர் புகார்

சென்னை: தனியார் நகைக்கடைப் பாதுகாவலரின் கைப்பையில் வைத்திருந்த ஐந்து தோட்டாக்கள், விலை உயர்ந்த அலைபேசி ஆகியவற்றைக் காணவில்லை எனக் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

jewellery
jewellery

By

Published : Mar 5, 2020, 1:59 PM IST

அண்ணா நகர் 2ஆவது அவென்யூவில் உள்ள தனியார் நகைக் கடையில் (தனிஷ்க்) பாதுகாவலராகப் பணிபுரிபவர் அருள்மணி (57). இவர் இங்கு காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை, துப்பாக்கித் தோட்டாக்கள் இருக்கும் கைப்பையை கடையின் வெளியே வைத்துவிட்டு கடைக்கு உள்ளே சென்று வருகைப்பதிவு கையொப்பமிட்டு வந்துள்ளார். அப்போது அவரது கைப்பையில் வைத்திருந்த ஐந்து தோட்டாக்கள், விலையுயர்ந்த அலைபேசி ஆகியவை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து பாதுகாவலர் அருள்மணி அண்ணா நகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரளித்தார். அதனடிப்படையில் அங்கு சென்ற காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததுடன், எப்போது, எங்கு வைத்து தோட்டாக்கள் காணாமல்போயின? உள்ளிட்ட விவரங்களை அருள்மணியிடம் கேட்டுத் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: தொடரும் மது கடத்தல்: துரத்தும் காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details