தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கிசான் திட்ட முறைகேடு: மாவட்ட வேளாண் துணை இயக்குநர் இடமாற்றம்!

கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு சேரவேண்டிய பணத்தில் முறைகேடு நடந்ததாக தமிழ்நாட்டின் பல மாவட்ட விவசாயிகளிடமிருந்து புகார்கள் எழுந்தன. இச்சூழலில் இது குறித்து விசாரணை நடத்திவந்த வேளாண்மைத் துறை முதன்மைச் செயலர் ககன்தீப்சிங் பேடி, விழுப்புரம் மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

kagandeep singh bedi
kagandeep singh bedi

By

Published : Sep 12, 2020, 12:14 PM IST

விழுப்புரம்:கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பிரதமரின் கிசான்திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்தில் அண்மையில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து வேளாண் துறை அலுவலர்கள் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவந்தனர். இச்சூழலில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநர் கென்னடி ஜெயக்குமார் நாமக்கல் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கிசான் திட்ட முறைகேட்டில் கென்னடி ஜெயக்குமாரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு வேளாண்மைத் துறை முதன்மைச் செயலர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details