தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மளிகை கடையில் மாமூல் கேட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது! - குற்றச் செய்திகள்

தாம்பரம் அருகே மளிகை கடையில் மாமூல் கேட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மாமூல் கேட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி
மாமூல் கேட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி

By

Published : Nov 17, 2020, 12:28 PM IST

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருணகிரி நாதர் தெருவில் பார்வதி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு தீபாவளியன்று வெள்ளை நிற சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் கடைக்கு வந்துள்ளார்.

அப்போது அவர், நீங்கள் உரிமை இல்லாமல் தீபாவளி பட்டாசு விற்பனை செய்து வருகிறீர்கள். நாளை காலை திரும்பவும் கடைக்கு வருவேன் 40 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் கூறி அங்கிருந்து மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் பயந்து போன கடை உரிமையாளர் உடனடியாக பீர்க்கண்காரணை காவல் ஆய்வாளர் பொன்ராஜிடம் புகார் அளித்துள்ளார்.

மாமூல் கேட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி

புகாரின் அடிப்படையில் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது வெள்ளை நிற சட்டை அணிந்த இளைஞர் பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு நபரை தேடி வந்த போது, அந்த நபர் பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகி செந்தில்குமார் என்பது தெரியவந்தது. தற்போது அந்த நபர் மீது வழக்குப்பதிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காவலர் வேடமணிந்து பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details