சென்னை பல்லாவரத்தையடுத்த திருநீர்மலையைச் சேர்ந்தவர் செல்வி (60). திருநீர்மலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சட்டவிரோத மது பாட்டில் விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்த இவர் பலமுறை சிறைக்கும் சென்றுள்ளார்.
தற்போது செல்விக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால், அவருடைய பேரன்களான ஞானபிரகாஷ் என்கிற டேனியல் (21) மற்றும் சந்திரபோஸ் (19) ஆகிய இருவரும், மது பாட்டில் விற்பனைத் தொழிலை செய்து வருகின்றனர். நாளுக்குநாள் இது அதிகரிக்கவே, அப்பகுதி மக்கள் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.