திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜிநகர் பகுதியில், கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த ராணி (54) என்பவரையும், பொம்மிக்குப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(36) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.