தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மதுவால் பறிபோன உயிர்கள் - மதுரையில் அதிகாலை சோகம் - தூக்கிட்டு தற்கொலை

மதுரை: மது குடித்ததால் ஏற்பட்டத் தகராறு காரணமாக மாமா, மருமகன் இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

தூக்கு
தூக்கு

By

Published : Jun 1, 2020, 2:37 PM IST

மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. அவருடைய மருமகன் சேதுராமன். இருவரும் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்டத் தகராறு காரணமாக, விரக்தியடைந்த ஜீவா புதூர் தொழிற்பேட்டை அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தன்னால்தான் மாமா ஜீவா, தற்கொலை செய்து கொண்டதாக வேதனையடைந்த மருமகன் சேதுராமன், தனது வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மது அருந்தியதால் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, மாமனும் மருமகனும் அடுத்தடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம் மதுரை கோ.புதூர் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து புதூர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details