தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கத்தியை காட்டி மிரட்டி செல்ஃபோன் பறிப்பு - சிசிடிவி காட்சி! - kanchipuram cctv

காஞ்சிபுரம் மாங்காடு அருகே அடையாளம் தெரியாத நபர்கள் உணவக உரிமையாளரிடம் பட்டாகத்தி மிரட்டி செல்போன் பறித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காடு சிசிடிவி
மாங்காடு சிசிடிவி

By

Published : Oct 7, 2020, 8:05 PM IST

காஞ்சிபுரம்: மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில், பட்டாக்கத்தியைக் காட்டி கைபேசியை பறித்துச் செல்லும் காணொலிப் பதிவுகள் இணையத்தில் உலாவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை போரூர் அடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் குன்றத்தூர் பிரதான சாலையில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இச்சூழலில், கடந்த வாரம் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு கடையை பூட்டிக்கொண்டு இருந்தபோது, இருச்சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சுரேஷை கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து விலை உயர்ந்த கைபேசியை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

கத்தியை காட்டி மிரட்டி செல்ஃபோன் பறிப்பு - மிரட்டும் சிசிடிவி பதிவு!

இதுகுறித்து சுரேஷ் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது இதுகுறித்த கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், இருச்சக்கர வாகனத்தில் வரும் இரண்டு இளைஞர்கள், கையில் பட்டாகத்தியுடன் வந்து சுரேஷ்யை மிரட்டியும், தாக்கியும் கைபேசியைப் பறித்துக்கொண்டு தப்பிச்செல்லும் பதைபதைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details