அரியாங்குப்பம் மணவெளி பகுதியில் இளைஞர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக அரியாங்குப்பம் காவல்துறையினருக்கு தகவலை கிடைத்தது. இதையடுத்து, சுடலை வீதியில் ரோந்து சென்ற காவலர்கள், அங்கு கஞ்சா விற்ற தேங்காய்த்திட்டைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் செல்வமணி ஆகிய இருவரை கைது செய்தனர்.
மாணவர்களிடம் கஞ்சா விற்ற இருவர் கைது! - கஞ்சா பறிமுதல்
புதுச்சேரி: பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
arrest
பின்னர், அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் 700 ரூபாயை அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், தேங்காய்த்திட்டு பகுதியைச் சேர்ந்த பொய் கார்த்தி என்பவர் வில்லியனூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து இப்பகுதியில் விற்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை இவ்வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:திருமங்கலம் அருகே சொத்துக்காக தாயை கொன்ற மகன்கள்