மும்பை: நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குநர் ஆயுஷ் திவாரி தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக தொலைக்காட்சி நடிகை ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நடிகைக்கு பாலியல் வன்கொடுமை: காஸ்டிங் இயக்குநர் மீது புகார்! - ரேப் நியூஸ்
மும்பையில் நடிகர்களை தேர்வு செய்யும் இயக்குநர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக தொலைக்காட்சி நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக நவம்பர் 26ஆம் தேதி நடிகை புகாரளித்திருந்த நிலையில், இதுவரையில் எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இவரின் இந்த புகாரைத் தொடர்ந்து வெர்சோவா காவல் நிலையத்தில் பிரிவு 376இன் கீழ் ஆயுஸ் திவாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கடந்த 2 வருடங்களாக தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நடிகை தனது புகார் மனுவின் தெரிவித்துள்ளதாக காவல் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இப்புகாரை தொலைக்காட்சி தொடர் நடிகை, நவம்பர் 26ஆம் தேதி பதிவு செய்திருந்தார். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர், இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.