திருவள்ளூரில் உள்ள முக்கிய சாலையில் தனியாருக்கு செந்தமான நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்று வருகின்றனர்.
நிதி நிறுவன லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சி...திருவள்ளூரில் திக்...திக் - நிதி நிறுவனம்
திரூவள்ளூர்: நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்றிரவு நிதி நிறுவனத்தில் உள்ள நகைகள், பணத்தை ஊழியர்கள் லாக்கரில் வைத்து பூட்டிச் சென்றனர். இதனையடுத்து நள்ளிரவில் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர் நிறுவனத்தின் முன்பக்க ஷட்டரை உடைத்து உள்ளே சென்றார். அங்கிருந்த லாக்கரையும் உடைக்க முயன்றுள்ளார். ஆனால், லாக்கரை அவரால் உடைக்க முடியாததையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து தகவலறிந்த நிதி நிறுவன மேலாளர் திருவள்ளூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என தீவிர விசாரணை செய்துவருகின்றனர். நகரின் பிரதான பகுதியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.