விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேப்பிலைப்பட்டி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் மின்னல்கொடி(45). இவருக்கும் பெரியசந்தனம்(53) இருவருக்கும் இடையே நீண்ட காலமாகத் தகாத உறவு இருந்துவந்துள்ளது. இதனை மின்னல் கொடியின் தாயார் பலமுறை கண்டித்துள்ளார்.
சம்பவத்திற்கு முதல் நாள் இரவு பெரியசந்தனம், மின்னல்கொடியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். மின்னல்கொடி அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சந்தனம் அரிவாளை எடுத்துக்கொண்டுவிரட்டியுள்ளார். உயிர்பயத்தில் கொடி வீட்டை விட்டு வெளியே ஓடிச் சென்றுள்ளார். அவரைத் தேடிச்சென்ற சந்தனம் அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
தகாத உறவுக்கு இடையூறு: காதலியின் அம்மா படுகொலை வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த கொடியின் தாயை எழுப்பி அவர் எங்கே என்று கேட்டுள்ளார்,அதற்கு தன் மகளை விடுமாறும், இனிமேல் இங்கு வரக்கூடாது என்றும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெரியசந்தனம், தன்கையில் வைத்திருந்த அரிவாளால் சுப்பு தாயை வாயிலும் கையிலும் கொடூர முறையில் வெட்டினார்.
பின்பு அவர் வீட்டிலிருந்து சுப்பு தாயைத் தூக்கிச் சென்று எதிரே இருந்த பாழடைந்த வீட்டில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டின் முன் ரத்தக்காயம் பார்த்து அதிர்ச்சியடைந்து தாயைத் தேடிப் பார்த்துள்ளார். பின்னர் ரத்த தடங்கள் மூலம் அவர் எதிரில் உள்ள பாழடைந்த வீட்டில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்பு இதுகுறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து அப்பை நாயக்கன் பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்,கொலை செய்த பெரிய சந்தனத்தை வலைவீசித் தேடி வருகின்றனர்.