தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மீன்கடை வியாபாரி மர்ம மரணம் - Fish Market

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மீன்கடையில் வேலை செய்து வந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்கடை வியாபாரி மர்ம மரணம்

By

Published : Apr 27, 2019, 7:21 PM IST

Updated : Apr 28, 2019, 7:39 AM IST

வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (25). இவர், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். திருவல்லிக்கேணி, பல்லவன் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து அவர் அங்கு வேலை செய்து வந்துள்ளார். அவருடன் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த ரதி என்ற திருநங்கையும் ஓரே வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணியில் உள்ள கோஷா மருத்துவமனைக்கு கத்தி குத்து காயங்களுடன் அஜித்குமார் சிகிச்சைக்காக வந்தார். அவரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது, தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மகனை அவருடன் தங்கி இருந்த திருநங்கை ரதிதான் கத்தியில் குத்தியதாக, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அஜித் குமாரின் தாயார் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருநங்கை ரதியை தேடி வருகின்றனர்.

Last Updated : Apr 28, 2019, 7:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details