தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

போக்சோ சட்டத்தில் கைதான நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்பேரில் போக்சோ சட்டத்தில் கைதான நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

gundas
gundas

By

Published : Dec 3, 2020, 8:14 AM IST

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீரானதும் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மீது மருவத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் போக்சோ சட்டத்தில் கைதான குற்றவாளி செல்வராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்தார்.

அவரது பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, போக்சோ சட்டத்தில் கைதான குற்றவாளி செல்வராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அறிவுறுத்தினார். இதனையடுத்து, குற்றவாளி செல்வராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:கோவையில் சாலை விபத்து: முதியவர் உயிரிழப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details