தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கொலை வழக்கில் தொடர்புடைய மூவர் குண்டர் சட்டத்தில் கைது...! - தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையம்

தூத்துக்குடி: கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

arrested
arrested

By

Published : Nov 21, 2020, 8:56 PM IST

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான் காட்டு பகுதியில், தூத்துக்குடி மில்லர்புரம் என்ஜிஓ காலனியைச் சேர்ந்த கதிரேசன் (31) என்பவர், அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து சிப்காட் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (28) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல், கயத்தார் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் ஊர்காவலன், அவரது மகன் பசுபதி பாண்டியன் (20) ஆகியோரை கயத்தார் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அனுமதி கேட்டு ஆட்சிருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிக்கை அனுப்பினார்.

இதற்கு ஆட்சியர் செந்தில்ராஜ் ஒப்புதல் அளித்ததன் பேரில் சுந்தர்ராஜ், ஊர்காவலன், பசுபதி பாண்டியன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ், காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details