தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது! - மூன்று பேர்

ஈரோடு பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

cellphone_theft
cellphone_theft

By

Published : Oct 5, 2020, 10:16 PM IST

ஈரோடு: ஈரோடு பேருந்து நிலையத்தில் மதன்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தபோது மூன்று பேர், மதன்குமாரை திசை திருப்பி அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இதனையடுத்து மதன் குமார் தனது நண்பர்கள், பொதுமக்கள் உதவியுடன் செல்போனை பறித்த மூன்று பேரை பிடித்து, நகர காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்த ஈரோடு நகர காவல்துறையினர், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க :'விபத்துகளைத் தடுக்க விரைவில் ஆலோசனைக் கூட்டம்'

ABOUT THE AUTHOR

...view details