தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பால்கனி வழியாக செல்போன் லேப்டாப் திருட்டு - இருவர் கைது

சென்னை: நள்ளிரவில் வீட்டின் பால்கனி வழியாக செல்போன், லேப்டாப் ஆகியவற்றை திருடியவர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

theft
theft

By

Published : Sep 5, 2020, 11:02 PM IST

பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் வசிப்பவர்கள் கிருஷ்ணகுமார், பாஸ்கர் ஆகியோர். தங்களது வீடுகளில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த இருவரும், சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது, பால்கனியிலிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் குதித்து ஓடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் விலையுயர்ந்த செல்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை அவர்கள் திருடிச்சென்றது தெரிந்ததும், காவல் துறையின் அவசர உதவி எண்ணிற்கு இருவரும் புகாரளித்தனர்.

அதனடிப்படையில், இரவு நேர ரோந்துப் பணியில் இருந்த தண்டையார்பேட்டை காவல் துறையினர் திருடர்களைத் தேடினர். அப்போது அங்கு ஆட்டோவில் மறைந்திருந்த இருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்குபோது, அவர்கள் மணிகண்டன், தீபக்குமார் என்பதும், செல்பேசி, மடிக்கணினியை திருடியதும் தெரியவந்தது.

பின்னர் இருவரையும் கைதுசெய்த காவலர்கள், அவர்களிடமிருந்து விலை உயர்ந்த செல்பேசி, மடிக்கணினி, திருடுவதற்குப் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

பால்கனி வழியாக செல்போன் லேப்டாப் திருட்டு - இருவர் கைது

இதையும் படிங்க: கஞ்சா விற்பனை: தரங்கம்பாடி அருகே இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details