தேனி மாவட்டம் பாரஸ்ட் சாலையைச் சேர்ந்தவர் செல்லத்துரை (70). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் தனது பேத்தியுடன் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையடுத்து, செல்லத்துரை மீது தேனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தேனி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி கீதா பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணத் தொகையை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் இதில், ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் குழந்தையின் படிப்பு செலவிற்காகவும், ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் குழந்தையின் குடும்பத்திற்கு வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தொகையை லட்சுமிபுரம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவனின் பிறப்புறுப்பைத் துண்டித்துக் கொன்ற மனைவி!