தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மூதாட்டியிடம் நட்பு ரீதியாகப் பழகி தங்க நகைகளைத் திருடிய பெண் கைது - theft lady arrested in Nagaipattinam

புதுச்சேரி: திருவேட்டக்குடி பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவரிடம் நட்பு ரீதியாகப் பழகி, அவரிடமிருந்து 14 பவுன் தங்க நகைகளைத் திருடிய பெண்ணை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

theft
theft

By

Published : Oct 13, 2020, 5:56 PM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருவேட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பவுனம்மாள் (68). இவர் அரசு மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இந்நிலையில் வரிச்சிக்குடியைச் சேர்ந்த பாத்திமா (28) என்பவர் வீட்டில் தனியாக வசித்துவந்த மூதாட்டியிடம் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார்.

இந்தச் சூழலில் நேற்று (அக். 12) மூதாட்டி வீட்டிற்கு வந்த பாத்திமா, மூதாட்டி குளிக்கச் சென்றபோது வீட்டிலிருந்து மூதாட்டியின் 14 பவுன் தங்க நகைகள், நான்காயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றுள்ளார்.

குளித்துவிட்டு வந்த மூதாட்டி நகைகள் காணாமல்போனதைக் கண்டு பதறி கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் பாத்திமாவை பிடித்து விசாரித்தில் நகைகளைத் திருடி தனியார் வங்கியில் அடகு வைத்ததை ஒப்புக்கொண்டார்.

அதனையடுத்து அவர் நகைகளை அடகுவைத்த பணம் நான்கரை லட்சம், மீதமுள்ள நகைகள், அடகு வைத்ததில் வாங்கிய 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை மீட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details