போளூர் அடுத்த குன்னத்தூரைச் சேர்ந்தவர் முருகதாஸ் (44) தனது வீட்டின் மாடியில் ரெடிமேட் துணிகள் தயாரித்து ஜவுளிக்கடைகளுக்கு சப்ளை செய்துவந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி உமாராணி, மகள்கள் பிரியங்கா, சினேகா ஆகியோருடன் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்கச் சென்றுள்ளனர்.
அத்திவரதரை தரிசிக்கச் சென்றவர் வீட்டில் திருட்டு! - robbery
காஞ்சிபுரம்: போளூர் அருகே காஞ்சிபுரத்திற்கு அத்திவரதரை தரிசனம் செய்ய சென்ற ரெடிமேட் துணிகள் கடை வியாபாரி வீட்டில் 28 சவரன் நகைகள்,ரொக்கம் 72 ஆயிரம் ரூபாய் திருடுபோயுள்ளது.
தரிசனம் முடித்துவிட்டு மறுநாள் விடியற்காலை வீடு திரும்பியவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவின் பூட்டை உடைத்து அதிலிருந்த தங்க செயின், நெக்லஸ், வளையல், மோதிரம் உள்பட 28 சவரன் நகைகள், ரொக்கப்பணம் ரூபாய் 72 ஆயிரம் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து முருகதாஸ் போளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார். தடயவியல் நிபுணர்கள் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் வந்திருந்து தடயங்கள் சேகரித்தனர்.