வேலூர் மாவட்டம் பெருமுகை பகுதியில் உள்ள மலைப்பகுதியை ஆறுமுகம் என்பவர் குத்தகை எடுத்து கல்குவாரி நடத்தி வருகிறார். இதனயடுத்து அங்கு வேலைக்குச் சென்ற சிலர் ஒரு பெண்ணின் சடலம் ஊதிய நிலையில் பள்ளத்தில் கிடப்பதாக சத்துவாச்சாரி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளம் பெண் கல்குவாரியில் சடலமாக மீட்பு இது குறித்து விசாரணை மேற்கெண்ட காவல் துறையினர், விசாரணையில் இறந்த பெண் வேலூர் அடுத்த அரியூர் பகுதியைச் சேர்ந்த காயத்திரி (பெயர் மாற்றம் செய்யப்பட்டது) என்பது தெரியவந்தது. இவர் வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கேன்டீனில் பணிபுரிந்து வந்ததுள்ளார். கடந்த 14ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக வீட்டை விட்டு சென்றவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரனையில், காயத்திரி வன்கொடுமை செய்யப்பட்டு மலையிலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த கொலை குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.