தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன் (35). இவர் கடந்த 17ஆம் தேதி நிலத்தகராறு தொடர்பாக கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக தட்டார்மடம் காவல் ஆய்வாளராக இருந்த ஹரி கிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், சின்னத்துரை முத்துராமலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருமணவேல், முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்நிலையில், சிபிசிஐடி காவல்துறையினர் சிறையில் உள்ள நான்குபேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண் 1இல் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் நான்கு பேரையும் ஆஜர்படுத்தினர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருகின்ற அக்டோபர் 6ஆம் தேதி வரை 6 நாள்கள் குற்றவாளிகள் நான்கு பேரையும் சிபிசிஐடி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க:நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?