தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்துவந்தவர் 24 வயதான பித்தலா கிரான். மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.
இதன்காரணமாக தினந்தோறும் மது அருந்திவிட்டு, தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கொடூரத்தின் உச்சமாக 2015ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்ற தீயை பற்றவைத்தார். வீட்டின் கதவையும் பூட்டிக் கொண்டார். தீ உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில் கிரானின் மனைவி சப்தம் கேட்டு அருகேயிருந்தவர்கள் ஓடிவந்தனர்.
அதற்குள் அவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு கரிக்கட்டையாகச் சுருண்டுவிழுந்தார். அவருக்கு அரசு காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஜனவரி 6ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.