சௌகார்பேட்டை பள்ளியப்பன் தெருவில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அருணாசலேஸ்வரர், வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2016 முதல் 2018ஆம் ஆண்டு வரை, பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பிரபாகர் (44) என்பவர் கணக்காளராக இருந்துள்ளார்.
அப்போது, அந்தக் கோயிலில் 15 ஊழியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். அவ்வூழியர்களுக்கு பண்டிகைக் காலங்களில் சிறப்புத் தொகையாக ஒதுக்கப்படும் சம்பளப் பணத்தைத் தராமல், சுமார் 3 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை பிரபாகர் கையாடல் செய்துள்ளார். இந்த மோசடியைக் கண்டறிந்த தற்போதைய செயல் அலுவலரான ராதாமணி, இதுதொடர்பாக யானைகவுனி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.