திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (32). கூலி வேலை செய்து வரும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த பானுபிரியா (28) என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடை சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவும் இருவருக்கும் வழக்கம் போல் பிரச்னை ஏற்பட்டதால், பானுபிரியா அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றவர் பக்கத்து அறையில் தூக்கிட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று (ஜன. 3) காலை அறை நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்த பானுபிரியாவின் பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பானுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.