திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி பிரதான சாலையில் பூஞ்சோலை எனும் பல்பொருள் அங்காடியுடன் சேர்ந்து மருந்துக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு இன்று (செப்.14) காலை 10:30 மணியளவில் ஒரு சிறுவன் மருந்துச் சீட்டை எடுத்துக்கொண்டு இரண்டு நோயாளிகளுக்கு மருந்து வாங்க வந்துள்ளார்.
பல்பொருள் அங்காடியில் திருட்டு - காட்டிக் கொடுத்த சிசிடிவி - thiruppathur crime
திருப்பத்தூர் : பல்பொருள் அங்காடியில் பொருள் வாங்க வந்த சிறுவன், கடை உரிமையாளரின் கைபேசியை திருடிச் சென்ற காட்சி, சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அப்போது மருந்து வாங்கிவிட்டு ஏதோ பொருள் வாங்குவது போல நின்று, யாரும் பார்க்காதபோது, மேசையில் இருந்த கைபேசியை லாவகமாக எடுத்து தனது சட்டைப் பையில் வைத்துக்கொண்டுச் சென்று மறைந்தார். தொடர்ந்து, தனது கைபேசியைக் காணாத நிலையில், கடையின் உரிமையாளர்அவரது கடையில் வைத்திருந்த கண்காணிப்புப் படக்கருவியை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது அதில், மருந்து வாங்க வந்த சிறுவன் கைபேசியைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் திருப்பத்தூர் நகரக் காவல் துறையினர் கைபேசியை திருடிச் சென்ற சிறுவனை வலைவீசித் தேடி வருகின்றனர்.