தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

டிவி உடைந்ததால் மாணவன் தற்கொலை! - மாணவன் தற்கொலை

சென்னை: டிவி உடைந்ததால் பெற்றோர் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide
suicide

By

Published : Sep 23, 2020, 5:47 PM IST

குன்றத்தூரைச் சேர்ந்த வடிவேல் என்பவர் தனியார் நிறுவனத்திலும், அவரது மனைவி கவிதா தனியார் வங்கியிலும் வேலை செய்துவருகின்றனர். இவர்களது மகன் பிரைட் சாம் (14) ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார்.

இந்நிலையில், பிரைட் சாம் வீட்டிற்கு நேற்று அவரது நண்பர்கள் வந்துள்ளனர். அவர்கள் வெகுநேரமாக அழைத்தும் சாம் வராததால், வீட்டின் அறை வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் சாம் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பதறியடித்து ஓடிவந்த பிரைட் சாமின் பெற்றோர் அவரைத் தூக்கிக் கொண்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால், சாம் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து குன்றத்தூர் காவல் துறையினர் விசாரணை செய்ததில், டிவியை சானிடைசர் கொண்டு சாம் துடைத்தபோது, தவறுதலாக டிவி கீழே விழுந்து உடைந்ததால், பெற்றோர் திட்டுவார்களோ என்று அஞ்சி அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

டிவி உடைந்ததால் மாணவன் தற்கொலை!

மேலும், தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களிலும் குன்றத்தூர் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர். பள்ளி மாணவனின் தற்கொலை நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: காவல் துறைக்குத் தெரியாமல் இளைஞரின் உடல் எரிப்பு: ஐந்து பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details