தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சொத்து கேட்டு உணவு அளிக்க மறுத்த மகனை கடப்பாரையால் அடித்துக் கொலை - தந்தையை கொன்ற மகன்

நாமக்கல் : சொத்து கேட்டு உணவளிக்க மறுத்த மகனை ஆத்திரத்தில் கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர்.

கொலை
கொலை

By

Published : Jun 1, 2020, 2:36 PM IST

நாமக்கல் மாவட்டம், இறையமங்கலம் கிராமம், பொய்யேரி புதூரைச் சேர்ந்தவர் முத்துசாமி ( வயது 70). இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் , தனது மூத்த மகன் வீட்டில் இரண்டு மாதமும், இளைய மகனும் லாரி ஓட்டுனருமான விஜயகுமார் வீட்டில் இரண்டு மாதமும் மாறி மாறி தங்கி வருகிறார்.

இந்நிலையில், முத்துசாமியின் பூர்வீக சொத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை, சில தினங்களாக இளைய மகன் விஜயகுமார் தொடர்ந்து கேட்டு நச்சரித்து வந்துள்ளார். மேலும் இதன் காரணமாக அவரது தந்தைக்கு அடிக்கடி உணவு தராமல், தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட மகன், கைது செய்யப்பட்ட தந்தை
இந்நிலையில் நேற்று (மே 31) இரவு முத்துசாமியும் விஜயகுமாரும் குடிபோதையில் இருந்த நிலையில், மீண்டும் சொத்து தராமல் உணவளிக்க முடியாது என விஜயகுமார் கூறியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த முத்துசாமி, தனது வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து விஜயகுமாரின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விஜயகுமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விஜயகுமாரின் உடலை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூற்றாய்வுக்கு அனுப்பி வைத்து, முத்துசாமியை கைது செய்தனர்.

குடிபோதையில் தந்தையே மகனை கடப்பாரையால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details