சூளைமேடு பகுதியைச் சேர்ந்த கபிலன் என்பவர் தனது ராயல் என்ஃபீல்டு பைக் திருடப்பட்டதாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் புகாரளித்திருந்தார். இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய வாகனச் சோதனையில் கபிலனின் பைக்கை ஓட்டி வந்தவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த கொம்பையன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த காவலர்கள், விசாரணைக்காக நெல்லை மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, கொம்பையன் பல்வேறு இடங்களில் திருடி மறைத்து வைத்திருந்த 6 கார்களும், 6 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் எப்போது திருடப்பட்டது, இதன் உரிமையாளர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.