அலங்காநல்லூரை சேர்ந்தவர் இளங்கோவன்(55) விவசாயியான இவர், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தன் வீட்டின் முன்பாக இளங்கோவன் அமர்ந்திருந்தார்.
அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கூலிப் படை, வீட்டின் வெளியே இளங்கோவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இளைஞர்களின் அரிவாள் வெட்டுகளில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார் இளங்கோவன். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாளே (ஜூன் 1) இளங்கோவன் உயிரிழந்தார்.