தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

இருதரப்பு மோதல் - சமாதானம் செய்ய வந்தவருக்கு அரிவாள் வெட்டு! - சென்னை குற்றம்

சென்னை கொருக்குப்பேட்டையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு. இச்சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

seven arrested in chennai gang war
seven arrested in chennai gang war

By

Published : Oct 13, 2020, 12:21 AM IST

சென்னை: இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க வந்தவரை வெட்டிய ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் அதே பகுதியிலுள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் சகோதரர்கள், நவீனை கண்டிப்பதற்காக நேரு நகர் அருகே சென்று, நவீனையும், அவரது நண்பர்களையும் தாக்கியுள்ளனர்.

இதில் மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு தப்பிச் சென்றனர். மீனாம்பாள் நகர் மேம்பாலம் அருகே முழுவதும் குடித்துவிட்டு, தங்களை தாக்கிய நான்கு பேரையும் மீண்டும் பழிதீர்க்க அரிவாளுடன் சென்றபோது, பெண்ணின் சகோதரர்கள் உணவு விடுதிக்குள் நுழைந்துள்ளனர்.

தொடர்ந்து இருதரப்பினரும் ஒருவரைக்கொருவர் தாக்கிக் கொண்டபோது, கடையின் உரிமையாளர் மணிகண்டன் தடுத்துள்ளார். இதில் அவரை தலையில் அரிவாளால் வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கடையின் உரிமையாளர் தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில், கடையின் உள்ளே வந்து மோதிக்கொண்ட ஏழு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், ராஜேந்திரன், வினோத், ராஜேஷ், நவீன், பாலாஜி, சதீஷ்குமார் ஆகிய ஏழு பேர் என தெரியவந்தது. இவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details