விழுப்புரம்: காவல்துறை துணை தலைவர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டிஐஜி அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு! - விழுப்புரம் தீக்குளித்து தற்கொலை முயற்சி
15:37 November 11
13:28 November 11
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள மேலமனக்குடி பகுதியைச் சேர்ந்தவர் லோகசுந்தரம். சுமார் 40 வயது மதிக்கதக்க இவர், இன்று விழுப்புரத்திலுள்ள காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தில் தனது குடும்ப பிரச்னை தொடர்பாக புகார் மனு அளிக்க வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடம்பில் ஊற்றிக் கொண்டு தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியில் இருந்த காவலர்கள், அவரை மீட்டு உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
50 விழுக்காடு தீக்காயங்களுடன் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.