துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று (ஜனவரி 2) அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தைச் சோ்ந்த முகமது உசேன்(28), நாகப்பட்டினத்தைச் சோ்ந்த முகமது அசாரூதின்(31) ஆகிய இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 48.27 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் - இருவர் கைது - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
சென்னை: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 48.27 லட்சம் மதிப்புடைய 937 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர், அது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.
smuggling gold seized
அவர்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த தங்கத் தகடுகள், தங்க பேஸ்ட்கள், தங்கக் கட்டிகளை அலுவலர்கள் கைப்பற்றினர். இருவரிடமிருந்தும் மொத்தம் 937 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 48.27 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அலுவலர்கள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.