தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

குழந்தை திருமணம் - ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை - parents forcing marriage

சேலம்: திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் வற்புறுத்தியதால் ஒன்பதாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

child marriage

By

Published : Sep 2, 2019, 11:50 AM IST

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி அருகே உள்ள மூணாம் கரடு பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன், கந்தம்மாள் தம்பதி. இவர்களுக்கு மோனிஷா என்ற 17 வயது மகள் மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், மாணவியின் தந்தை முருகேசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மோனிஷாவிற்கு திருமணம் செய்ய அவரது தாயார், உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். திருமணம் குறித்து பெற்றோர்கள் மோனிஷாவிடம் தெரிவித்தபோது தான் தொடர்ந்து படிக்க ஆசைப்படுவதாகவும் தற்போது திருமணத்திற்கு அவசியமில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி மோனிஷா

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் வற்புறுத்தி கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவி மோனிஷா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த பெற்றோரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆய்வாளர் குமார், காவலர்கள் மோனிஷாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கட்டாய திருமண முயற்சியால் மனமுடைந்த மாணவி தற்கொலை
இது தொடர்பாக காவல்துறையினர் மாணவியின் பெற்றோர், உறவினர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் ஒன்பதாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details