நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள நீலவெளி நெய்வாசல் காலனி தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் ரஞ்சித்(19). உழவு இயந்திர ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது! - seven month pregnant
நாகப்பட்டினம்: திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
pocso act
இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி நெருங்கிப் பழகியுள்ளார். இதில் சிறுமி ஏழு மாத கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து (pocso) ரஞ்சித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.