பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குணம் பிரிவு ரோடு பகுதியில், குடியிருந்துவருபவர் ரஹ்மான்யா. இவரது கணவர் முபாரக் பாஷா வெளியூரில் வேலை பார்க்கும் நிலையில், ரஹ்மான்யா தனது தாயார் மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் நேற்று இரவு (அக்.29) தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் ரஹ்மான்யா வீட்டின் பின்புறம் உள்ள காம்பவுண்ட் வழியாக குதித்து, வீட்டிலிருந்த பீரோவை உடைத்து 15 பவுன் நகைகள், ஒரு லட்சம் ரொக்கம், 50 வெளிநாட்டு புடவைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.