கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தின் கொரியர் அனுப்பும் பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.49 கிலோ எபிட்ரின் போதை மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர், கல்யாணப் பத்திரிகையின் இடையே இந்த போதை மருந்தை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயற்சித்துள்ளார். கல்யாணப் பத்திரிகை அட்டையின் இருபுறமும் பாலித்தீன் பவுச்சில் வெள்ளை நிற பவுடர் அடைக்கப்பட்டிருந்ததை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் கண்டறிந்தனர். இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதம் மட்டும் அதிகமான போதைப் பொருட்கள் கடத்தப்பட்டிருப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.