தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

முன்விரோதம் காரணமாக தனியார் வங்கி ஊழியர் வெட்டி கொலை! - காவல்துறை விசாரணை

திருச்சி:  மண்ணச்சநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக தனியார் வங்கி ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Private bank employee hacked to death due to hostility!
Private bank employee hacked to death due to hostility!

By

Published : Jul 13, 2020, 11:27 PM IST

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வண்ணமணி. இவருக்கு கோவேந்திரன், புகழேந்தி ஆகிய இரு மகன்கள் இருந்தனர். இதில் புகழேந்தி திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு ஏற்பட்ட தகராறில் ரங்கராஜ் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கோவேந்திரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இதற்கிடையில் வண்ணமணி குடும்பத்தினர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாச்சூர் கிராமத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் புகழேந்தி தனது நண்பர் சதீஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பாச்சூருக்கு சென்றுள்ளார். அப்போது அவரை காரில் வழிமறித்த 5 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் புகழேந்தியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அவரது நண்பர் சதீஷ் படுகாயமடைந்தார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் காவல் துறையினர், புகழேந்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த சதீஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details