சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சக்கரவர்த்தி என்பவரை ராசிபுரம் காவல்துரையினர் கைது செய்தனர். நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்ரவர்த்தியை விசாரணைக்காக காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி, காவலர் முஸ்தபா ஆகியோர் அழைத்துச் சென்றனர்.
கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் சிறையில் அடைக்க சக்கரவர்த்தியை அழைத்து வந்தபோது காவல்துறையின் பிடியிலிருந்து அவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடிய குற்றவாளி ஆத்தூர் பேருந்து நிலையத்தில், நாமக்கல் பேருந்து ஏற வரும்போது, அவர் தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. உதவி ஆய்வாளர் சுப்பிரமணி, காவலர் முஸ்தபா சக்கரவர்த்தியை துரத்திச் சென்ற போது அவர்களை தாக்கிவிட்டு தப்பியதில் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி காயமடைந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஆத்தூர் காவல்துறையினர் தப்பியோடிய சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது!