திருச்சி, துவாக்குடி அருகே அமைந்துள்ளது தேசிய தொழில்நுட்ப கழகம். இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் விடுதியில் தங்கி படித்துவருகின்றனர். இவர்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி ஒருவரும் விடுதியில் தங்கி மூன்றாமாண்டு பொறியியல் படித்துவருகிறார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி அந்த மாணவி தனது காதலனுடன் வெளியில் சென்றுவிட்டு நேற்று அதிகாலை மீண்டும் விடுதிக்கு திரும்பியுள்ளார்.
தேசிய தொழில்நுட்ப கழகம்,திருச்சி அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் தான் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் எனவும், இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி மாணவியின் காதலனை தாக்கியுள்ளார். இதில் அந்த மாணவர் படுகாயமடைந்து மயங்கினார்.
பின்னர் அந்த மாணவியை கல்லூரி விடுதியில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்ற அவர், காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதில் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்ததில், அவர் அதேப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், மாணவியிடம் ஊர்காவல்படை காவலர் என பொய்சொல்லி பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரியவந்தது.
தேசிய தொழில்நுட்ப கழக வளாகம்