தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

விசாரணை கைதி தப்பியோட முயற்சி - சுற்றிவளைத்துப் பிடித்த போலீஸ்! - erode news

நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற கைதி தப்பியோட‌ முயற்சி செய்துள்ளார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட காவல் துறையினர், அவரை சுற்றுவளைத்து கைது செய்தனர்.

police arrested escaped acquit in erode
police arrested escaped acquit in erode

By

Published : Dec 30, 2020, 10:47 PM IST

ஈரோடு: விசாரணைக்காக அழைத்துச் சென்ற கைது தப்பியோட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் வர்ணம் பூசும் பணி செய்து வந்துள்ளார். இவர் மீது 2017ஆம் ஆண்டில், நகர காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஈரோடு சம்பத் நகரில் அமைந்துள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இச்சூழலில் வழக்கு விசாரணைக்காக கோவை சிறையிலிருந்து காவல் துறையினர் ஈரோடு மகிளா நீதிமன்றத்திற்கு தமிழ்செல்வனை அழைத்துவந்தனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் ஜனவரி 7ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து கழிவறைக்குச் செல்வதற்காக கைவிலங்கு கழட்டியபோது, தமிழ் செல்வன் அங்கிருந்து தப்பித்துச் சென்றார். இதை சூதாரித்துக்கொண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், பெருந்துறை சாலையில் கைதியை மடக்கிப் பிடித்தனர். பின்னர் கைதி தமிழ் செல்வனை கோவை சிறைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details